கன்னிகை அம்பாள் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :3306 days ago
திருக்கழுக்குன்றம்: ரப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கன்னிகை அம்பாள் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் ஊராட்சிக்குட்பட்ட கோரப்பட்டு கிராமத்தில் கன்னிகை அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை, 10:00 மணிக்கு கோபுர விமானம் மற்றும் மூலவர் கன்னிகை அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு வாண வேடிக்கை மற்றும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.