உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாசுர ஏடுடன் திருஞானசம்பந்தர் பவனி!

திருப்பாசுர ஏடுடன் திருஞானசம்பந்தர் பவனி!

திருவேடகம்: சோழவந்தான் திருவேடகம் ஏலவார்குழலியம்மன் ஏடகநாதர்சுவாமி கோயிலில் ஆவணி பவுர்ணமி உற்சவத்தில் வறண்ட வைகையாற்றில் ஏடுஎதிரேறிய திருவிழா நடந்தது. திருப்பாசுர ஏட்டை விட நீரில் எதிர்த்து வென்ற புராணவரலாற்றை சண்முகதேசிகர் பக்தர்களுக்கு விளக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.  வாதுவென்ற விநாயகர்சுவாமி, அமைச்சர் குலச்சிறைநாயனாருடன் தங்கத்திலான திருப்பாசுர ஏடுடன் திருஞானசம்பந்தர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !