ஓசூரம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :3401 days ago
ஆர்.கே.பேட்டை:பெருமாநல்லுார் ஓசூரம்மன் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த, பெருமாநல்லுார் கிராமத்தில் கொற்றலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, ஓசூரம்மன் கோவில். புரட்டாசி வெள்ளிக்கிழமை என்பதால், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, பால், தேன், பன்னீர் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மூலவர் சன்னிதி வாயிற்கதவு அருகே பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுகளை புதுப்பிக்கவும், குப்பை தொட்டியை புதிதாக வாங்கி வைக்கவும், ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.