உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெயலலிதா குணமடைய பாலசுப்ரமணியர் கோவிலில் வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா குணமடைய பாலசுப்ரமணியர் கோவிலில் வழிபாடு

சேலம்: ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் முருகன் கோவிலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அழகம்மாள் உள்ளிட்ட தலைவாசல் ஒன்றிய நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்டோர், சிறப்பு பூஜை செய்தனர். இதேபோல், சேலம், ராஜகணபதி கோவில், சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், மாரிம்மன் கோவில்களில் பூஜை நடந்தது. மேலும், ஏற்காடு சட்டசபை உறுப்பினர் சித்ரா தலைமையில், ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் உள்ள சாட்டை சமயபுர மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !