பலம் வாய்ந்த ஜெபம்!
ADDED :3332 days ago
“நான் கூப்பிட்ட நாளிலே (ஜெபம் செய்த நாளில்) எனக்கு மறுஉத்தரவு அருளினீர் (உடனே பலன் தந்தீர்). என் ஆத்துமாவிலே பெலன் (வலிமை) தந்து என்னைத் தைரியபடுத்தினீர்!” என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. ஜெபம் பலம் வாய்ந்தது. வல்லமை நிறைந்தது. நாமாக, சில காரியங்களைத் திட்டமிடும் போது, பிசாசானவன் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்வான். நாம் ஜெப சிந்தனையற்றவர்களாக பரபரப்பாக பணியில் ஈடுபடும்போது புன்முறுவல் செய்வான். அதே நேரம் ஆண்டவரை நினைத்து விட்டால், பிசாசானவன் நம்மைப் பார்த்து நடுங்க ஆரம்பிப்பான். அதிலும் நாம் சிலராகக் கூடி ஜெபிக்கும் போது அவன் நடுநடுங்கிப் போகிறான். ஏனெனில், தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார். பதிலளிக்கும் போது ஒவ்வொருவருக்கும் மேன்மையானதைக் கொடுக்கிறார்.