உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பெருமாளுக்கு, நேற்று, ஏகாதசி திருமஞ்சனம் சிறப்பாக நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு, காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர், மாலை 5:30 மணிக்கு மாட வீதிகளில், வீதிஉலா வந்தார். ஏராளமானோர் பெருமாளை வழிபட்டனர். திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில், பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும், நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, மாலை 5:30 மணிக்கு, உற்சவர் பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !