உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம்  ராஜ ராஜேஸ்வரி  அம்மன் கோவிலில், வரும் 1ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. ரெட்டியார்பாளையம் காவேரி நகரில், ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 13ம் ஆண்டு நவராத்திரி விழா வரும் அக்.,1ம் தேதி துவங்கி,  11ம் தேதி வரையில் நடக்கிறது. விழா துவக்க நாள் முதல்  ஒவ்வொரு நாளும் காலை 7:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.  இரவு 7:00 மணிக்கு  ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  கோவில் தலைவர் வெங்கடசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !