திருவண்ணாமலையில் நாளை கருத்து கேட்பு
ADDED :3315 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 64 கோடி ரூபாய் மதிப்பில், கிரிவலப் பாதை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதில், மரங்களை வெட்டக் கூடாது என, பசுமை தீர்ப்பாயம், தானாக முன்வந்து வழக்கை எடுத்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், விரிவாக்கப் பணி தடைபடாமல் நடப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இந்திய வன அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.இந்த குழு, நாளை பிற்பகல், 3:00 மணிக்கு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.