செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் இன்று இரவு தேர்பவனி நடக்கிறது
ADDED :3314 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய தேர்பவனி இன்று இரவு 10 மணிக்கு நடக்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கடந்த செப்.20 ல் கொடியேற்றுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பங்குத்தந்தை சாமுஇதயன் தலைமையில் நவநாள் திருப்பலியும், நற்கருணை ஆதாரனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு தேர்பவனி நடக்கிறது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிதுாதர் சொரூபம் பவனியாக எடுத்துவரப்படுகிறது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானபேர் பங்கேற்கின்றனர். நாளை காலை திருவிழா திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குடி பங்குத்தந்தை சாமுஇதயன், கிராம கமிட்டியினர் செய்துள்ளனர்.