ஜக்காம்பேட்டையில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3381 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள ஓம்சாந்தி முதியோர் இல்லத்தில், நான்காம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. உண்ணாமலை பொன்னுரங்கன் குத்துவிளக்கேற்றி, வைத்தார். திண்டிவனம் சிவனடியார் திருக்கூடத்தின் சார்பில், மகாலிங்கம், குமார், சாமிக்கண்ணு, தேவராஜ், தனுசு, திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, திருவாசகம் பாடினர்.