அஷ்ட நாகேஸ்வரி சித்தர் பீட கோவிலில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை விழா
ADDED :3380 days ago
கரூர்: அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோவிலில், லட்சுமிநரசிம்மர் பிரதிஷ்டை வைபவ விழா நடந்தது. க.பரமத்தி அடுத்த சந்தோஷ் நகரில், அஷ்ட நாகேஸ்வரியம்மன் சித்தர் பீட கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் நாகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை வைபவ விழா நடந்தது. முன்னதாக, சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.