செல்லியம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம்
ADDED :3659 days ago
சோழவந்தான், சோழவந்தான் கச்சிராயிருப்பு வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு நெய் விளக்கு எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோயில் சென்று தரிசித்தனர். நேற்று மாலை கோயிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து வைகை ஆற்றில் கரைத்தனர். ஏற்பாடுகளை கச்சிராயிருப்பு கிராம விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.