குன்னுார் மாதா ஆலய திருவிழா
ADDED :3396 days ago
குன்னுார் : குன்னுார் வெலிங் டன் கன்டோன்மென்ட் பாபு வில்லேஜில் உள்ள, உத்தரிய மாதா ஆலயத்தின், 112வது ஆண்டு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, 25ம் தேதி, மதியம் அன்பின் விருந்து இடம் பெற்றது. தொடர்ந்து புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. அன்னையின் ஆடம்பர தேர்பவனி, வண்ண விளக்குகள் அலங்காரத்தில் நடந்தது. துாய உத்தரிய மாதா பஜனை சங்கத்தின் அச்சுப்பாடல், பஜனை சங்கங்களின் பக்தி பாடல்கள் இடம் பெற்றன. ஏற்பாடுகளை உத்தரிய மாதா பஜனை சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.