உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் புரட்டாசி சனி பூஜை

பொள்ளாச்சி கோவில்களில் புரட்டாசி சனி பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, காலை, 6:30 முதல் 8:30 மணி வரை, 18 வகையான சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மேலும், சுவாமிக்கு கரும்பு, அகத்திக்கீரை ஆகியவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாைளயம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.   பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், காலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.  பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இறைவனுக்கு, அவல், கரும்புச்சக்கரை உள்ளிட்டவை படைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !