எல்லம்மன் கோவிலில் சரஸ்வதிக்கு பாமாலை
ADDED :3312 days ago
ஆர்.கே.பேட்டை: எல்லம்மன் கோவிலில், நவராத்திரி கொலு சிறப்பு பூஜையில், சிறுவர்களின் பாமாலை நிகழ்ச்சி இடம் பெற்று வருகிறது. ஆர் . கே. பே ட்டைஅடுத்த, வங்கனுார் எல்லம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை ஒட்டி, கொலு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், சிறுவர்களின் பாமாலை நிகழ்ச்சி இடம் பெற்றது. கல்வி கடவுள் சரஸ்வதி பாமாலை பாடி, சிறுவர்கள் அம்மனை வழிபட்டனர் . வரும் 11ம் தேதி வரை , தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதே போல், செவிண்டியம்மன் கோவில் மற்றும் அம்மையார் குப்பம் அன்னியம்மன் கோவில்களிலும், நவராத்திரி சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. அன்னியம்மன் கோவிலில், நேற்று காலை , சிறப்பு அபிஷேகமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.