ராஜராஜேஸ்வரி, முத்து கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி சண்டி யாகம்
திருப்பூர் : குமார் நகர் கிழக்கு சக்தி விநாயகர், ராஜராஜேஸ்வரி, முத்து கருமாரியம்மன் கோவில், 19ம் ஆண்டு நவராத்திரி மகா சண்டியாக விழா, கடந்த, 30ல், துவங்கியது; சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, மகா சண்டிஹோமம் நடைபெற்றது. நேற்று மதியம் பூர்ணாஹுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மாலை, அப்பகுதி பெண்கள் பலர் பங்கேற்ற, குத்துவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரனாம அர்ச்சனை நடைபெற்றது. இன்று பட்டுப் புடவை, நவதுர்கா ஹோமம், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை, (11ல்) அம்மன் திருவீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. · அம்மாபாளையம் ஐஸ்வர்யா கார்டனில், ஜெகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகை கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது; வரும், 10ம் தேதி வரை நடைபெறுகிறது.