உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோத்ஸவம்

ஸ்ரீவி.வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோத்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வாரும், ஆண்டாளும் மங்களாசாசனம் செய்த வடபெருங்கோயிலுடையானின் புரட்டாசி திருவோண பிரம்மமோத்ஸவ விழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து தினமும் மண்டபம் எழுந்தருளல், நாலாயிரத்திவ்ய பிரபந்த சேவாகாலமும், இரவு புறப்பாடு நடக்கிறது. 7ம் நாளன்று பெரியபெருமாள் சயனசேவையும், 9ம் திருநாளான அக்டோபர் 11ல் செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அக்.16 ல் பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !