உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

புதுார்,: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தெப்பத்திருவிழா அக்.,13ல் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. நேற்று அதிகாலை உற்சவர் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 6:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின் பூஜைகள் நடந்தன. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று முதல் தினமும் காலையில் கிருஷ்ணர், ராமர், கஜேந்திர மோட்சம், ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், சேஷசயனம், வெண்ணெய்தாழி அலங்காரங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தல்லாகுளம் பகுதிகளில் வலம் வருகிறார். அக்.,11ல் காலை தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. அக்.,12ல் காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சப்தாவரணம் சாற்றுமுறை முடிந்து 8:00 மணிக்கு பூச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அக்.,13ல் காலை 10:30 மற்றும் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. மறுநாள் உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !