உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்!

தேவநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்!

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வரும் 10ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி உற்சவத்தில் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் சேர்த்தி சேவையில் அருள்பாலிக்கின்றனர். புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்து வரும் நவராத்திரி உற்சவத்தில் செங்கமலத் தாயார், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேர்த்தி சேவையில் அருள்பாலிக்கின்றனர்.  தினமும் செங்கமலத் தாயாருக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜை முடிந்து கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடக்கிறது. வரும் 11ம் தேதி விஜயதசமி முன்னிட்டு அம்பு உற்சவம் நடக்கிறது.  புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தில் மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !