உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சீனிவாசப்பெருமாள் கோயில் விழா கொடியேற்றம்

விருதுநகர் சீனிவாசப்பெருமாள் கோயில் விழா கொடியேற்றம்

விருதுநகர் : விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு பத்மாவதி தாயார் சீனிவாசப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளினார். பத்துநாள் நடைபெற உள்ள விழாவில் தினமும் மாலை சுவாமி வீதி உலா, சிறப்பு அபிஷேகமண, அலங்காரம், பூஜை நடக்கும். நேற்று மாலை சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டார். ராமமூர்த்தி ரோடு, மதுரை ரோடு, கந்தபுரம் தெரு போன்ற தெருக்கள் வழியாக சென்ற சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்டோபர் 11 ல் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஆன்மிக பக்த சபை செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !