வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா கொடியேற்றம்
கரூர்: கரூர், தான்தோணி கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கரூர், தான்தோணி கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழா, கடந்த செப்., 29ம் தேதி துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி நேற்று கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றப்பட்டது. வரும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம்; 11ம் தேதி சுவாமி தேருக்கு வருதல், திருத்தேரோட்டம்; 12ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது. வரும், 6ம் தேதி வெள்ளி கருடசேவை, 10ம் தேதி குதிரை வாகனம், 13ம் தேதி பின்னக்கிளை வாகனம், 14ம் தேதி கருட சேவை. வரும்,17ம் தேதி வெள்ளி கருட சேவை, 19ம் தேதி ஹனுமந்த வாகனம், 20ம் தேதி வெள்ளி கருட சேவை, 21ம் தேதி முத்துப்பல்லாக்கு, 22ம் தேதி ஆளும் பல்லாக்கு, 23ம் தேதி புஷ்ப யாகத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. கோவில் நடை திறப்பு, காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, உற்சவ காலங்களில் காலை, 9:00 மணிக்கு பல்லாக்கு, இரவு, 8:30 மணிக்கு வாகன புறப்பாடும் நடைபெறும். வரும், 8ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 15ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை என்பதால், சிறப்பு பூஜைகள் நடக்கும்.