உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் கொலு வைத்து சிறப்பு பூஜை!

வால்பாறை கோவில்களில் கொலு வைத்து சிறப்பு பூஜை!

வால்பாறை: வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு கொலுபொம்மைகள் வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரியையொட்டி, கொலு வைக்கப்பட்டுள்ளது. அதன் முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு நாள் தோறும் அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நவராத்திரிவிழாவில் தொடந்து நடைபெறும் விழாவில், 9 நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், பக்தி பாடல்களும் பாடப் படுகின்றன.  வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடும் நடக்கிறது. வீடுகளிலும் நவராத்திரி கொலு அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !