உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்கூரில் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், விஸ்வகர்மா ஐக்கிய சங்க தலைவர் பாலகுருசாமி தலைமையில் நடந்தது. பொற்கொல்லர் சங்க தலைவர் சுப்பிரமணி, கோயில் கமிட்டி தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். முன்னதாக நான்குகால யாகசாலை பூஜைகள் நடந்தது. கருட வாகன பிரவேசத்திற்கு பின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுந்தரவிநாயகருக்கும், விஸ்வகர்மா உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் கருப்பையா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !