உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, ஆரணியில் உள்ளது ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில், ஒவ் வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், பிரம் மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 3ம் தேதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள், காலை, 6:30 மணிக்கு கொடியேற்றம், கொடி பொங்கல், 9:00 மணிக்கு, பவழக்கால் சப்பரத்தில் உற்சவர் வீத உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை, 6:30 மணிக்கு, உற்சவர் நாக வாகனத்திலும், மாலை, 6:30 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு நாளும், மாலை, 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !