உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்

திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, 13 நாட்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான நவராத்திரி விழா, கடந்த, 1ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. தொடர்ந்து, மாலையில், 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றன. அப்போது, உற்சவர் மகிஷாசுரமர்த்தனி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று நடந்த நவராத்திரி விழாவை ஒட்டி, மூலவருக்கு, மாலையில் மஞ்சள் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தன; உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 13ம் தேதி வரை, நவராத்திரி விழா இக்கோவிலில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !