திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி
ADDED :3333 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில், கடந்த, 2ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. அப்போது, மதுகரவேணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நாள்தோறும், உபயதாரர்கள் சார்பில், வெள்ளிக்கலசம் சாற்றுதால், கணபதி தோற்றம், சிவ வழிபாடு, ஸ்கந்தருக்கு வேல் அளித்தல் போன்ற வழிபாடு நடக்கிறது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 11ம் தேதியுடன், நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.