உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி உற்சவம்

பவானி சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி உற்சவம்

பவானி: பவானியில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில், நவராத்திரி உற்சவம் துவங்கியது. பவானி, கூடுதுறை சாலையில், சிருங்கேரி சங்கர மடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. வரும், 10ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, துர்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜை நடக்கிறது. அக்., 11ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வித்யா ஹோமம், அபிஷேக ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்மாதிகாரி வெங்கட்ராமன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !