நீலமங்கலத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :3483 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, பசு பூஜைக்கு பின், பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து, சிறப்பு ஆராதனை நடந்தது. லலிதா சகஸ்ர நாமம் வாசிக்கப்பட்டது, அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் நடந்தது.