நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவது ஏன்?
ADDED :3327 days ago
நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவதற்கான காரணத்தை புராணங்கள் சொல்கின்றன. மது,கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து அன்னை பராசக்தியை தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்யக் கிளம்பிய ராமர் வெற்றிக்காக, தேவியை வழிபாடு செய்தார். இதனால் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியை ஒன்பது வடிவங்களில் மக்கள் வணங்குகின்றனர்.