உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய்க் கிழமைகளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

செவ்வாய்க் கிழமைகளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் பிரதானமானவை. ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள். இவர்களில் குரு, சுக்கிரன், சந்திரன் அதுவும் வளர்பிறைச் சந்திரன், பாபியரோடு சேராத புதன் ஆகியோரை சுபர்கள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. கூடியவரை இந்த சுபர்களின் தினங்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களிலும் மங்கல காரியங்களைச் செய்வார்கள். ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய மூன்று நாட்களும் சுப காரியங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டியது. அண்மைக் காலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சுப காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இந்த மூன்று நாட்களில் சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !