நவராத்திரி உற்சவத்தில் அம்பு வீசிய பெருமாள்
ADDED :3473 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.1ல் துவங்கியது.
தினமும் ஒவ்வொரு மண்டகபடி தாரர்கள் ஏற்பாட்டில் நவராத்திரி கொலு உற்சவ வழிபாடு நடந்தது. பத்தாம் நாளான நேற்றுமுன்தினம் மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே வலம் வந்தார். திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி சென்று பாரிவேட்டை அம்பு வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் செய்திருந்தனர். வடமதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா நடந்தது. மேற்கு ரத வீதியிலுள்ள காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் நகர்வலம் நடந்தது.