உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவில்களில் நவராத்திரி பண்டிகை கோலாகலம்

திருப்போரூர் கோவில்களில் நவராத்திரி பண்டிகை கோலாகலம்

திருப்போரூர்: திருப்போரூர் சுற்று வட்டாரப் பகுதி கோவில்களில் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருப்போரூர் வட்டாரப்பகுதியில் உள்ள, செம்பாக்கம் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில், தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில், கேளம்பாக்கம் கேளியம்மன் கோவில் மற்றும் சாய்பாபா கோவில், திருப்போரூர் செங்கழுநீர் அம்மன் கோவில் மற்றும் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்நிலையில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான ஒன்பதாவது நாளில், அனைத்து கோவில்களிலும் சிறப்பான பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்களும், மாங்கல்ய தாம்பூலமும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !