உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வர சுவாமி கோவிலில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு

சுகவனேஸ்வர சுவாமி கோவிலில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு, அக்., 1 ம் தேதி முதல் தினமும் சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று மாலை, 6,:00 மணிக்கு சுகவனேஸ்வரர் சுவாமி, அதிகார நந்தீசுவரர், மஹா நந்தீஸ்வரர், நிருந்த கணபதி, தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, வலம்புரி விநாயகர், ஐயப்பன், கங்காள மூர்த்தி, சரஸ்வதி, கஜலட்சுமி, துர்காதேவி, ஆஞ்சநேயர், பைரவர், சூரியன் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6.30 மணிக்கு மகிஷாரூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனைபோல் வேடமணிந்த சிறுமி, மகிஷாசூரனை வதம் செய்தார். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு கோவிலில் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இரவு, 7:30 மணிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்ட மகிமை வாய்ந்த குங்குமம், திருமாங்கல்ய கயிறுடன் கூடிய பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !