மொகரத்தை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி
ADDED :3341 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே, மொகரம் பண்டிகையை முன்னிட்டு, கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில், ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மொகரம் பண்டிகை, இன்று (அக். 12) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று முன்தினம் முஸ்லிம் இளைஞர்கள் பலர், தங்களின் உடலில், கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கீறி ரத்தம், சொட்ட சொட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.