முளைப்பாரி விழா
ADDED :3281 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தும் நேர்த்திகடன் நிறைவுசெய்தனர். ஒயிலாட்டம், கரகாட்டம் நடந்தது. மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கபட்டது. முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நாடகம் நடந்தது. கீரனுார் அரியநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.