ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாள் கோயிலில் புராணம் வாசித்தல்
ADDED :3396 days ago
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 10ம் நாளை முன்னிட்டு சர்க்கரைகுளத்தெரு வரதராஜபெருமாள் கோயிலில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளினார். அங்கு ரகு பட்டர் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேதபிரான் சுதர்சனன் பட்டர் பெரியபெருமாள் புராணம் வாசித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி முடிந்து மாலை 6 மணிக்கு பெரியபெருமாள் மூலஸ்தானம் வந்தடைகிறார். ஞாயிறு மாலை 5,30 மணிக்கு கோபாலவிலாசத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் மண்டகப்படி உபயதார்கள் செய்துள்ளனர்.