திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம்
ADDED :3326 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கோவில்களில் தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். திருவள்ளூர், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. தினமும் காலை யாக பூஜையும், மாலையில், பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று, காலை 9:00 மணிக்கு சிறப்பு யாகம், மாலை 6:00 மணிக்கு நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகிறது. வரும், 15ம் தேதி வரை பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெறும்.