உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டில் தசரா விழா நிறைவு

செங்கல்பட்டில் தசரா விழா நிறைவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் தசரா விழா நேற்று நிறைவடைந்தது. அதற்கான நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். செங்கல்பட்டில், 125 ஆண்டுகளுக்கும் மேலாக, தசரா விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 2ம் தேதி துவங்கிய தசரா விழா, நேற்று நிறைவடைந்தது. சின்னக்கடை தசரா, ஜவுளிக்கடை தசரா, பூக்கடை தசரா மற்றும் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வர் கோவில், திரவுபதியம்மன் கோவில், சின்னம்மன் கோவில், ஓசூராம்மன் கோவில், எல்லையம்மன்கோவில், மேட்டுத்தெரு, பெரியநத்தம், ஆகிய பகுதிகளில் தசரா விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, முக்கிய கோவில்களில் இருந்து, 17 சுவாமிகள் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சின்ன கடை அருகில், அணி வகுத்து வந்தன. அங்கு, வன்னி மரத்தில் அம்பு எய்து, அசுரனை வதம் செய்யும் விழா நிறைவடைந்தது. விழாவிற்கு, மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்தனர். விழாவிற்கு, செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !