முதனை முதுகுன்றீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3323 days ago
கம்மாபுரம்: முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். கம்மாபுரம் அடுத்த முதனை முதுகுன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் (11ம் தேதி) மாலை 3:00 மணியளவில் அபிஷேக ஆராதனை நடந்தது. முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை 6:00 மணியளவில், ஏராளமான பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். அவர்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணியளவில் துர்க்கையம்மன் வீதியுலா, மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.