உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா

வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா

காரைக்குடி, கோட்டையூர் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்., 2 ல் துவங்கியது. தொடர்ந்து தினமும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை நவராத்திரி விழாக்குழுத் தலைவர் துரைராஜ், செயலாளர் அய்க்கண், அறங்காவலர் கணபதி அம்பலம் செய்தனர். கோட்டையூர் கே.வி.ஏ.எல்.எம். பங்களாவில் மெச்சி ஆச்சி கொலு மண்டபத்தில் நவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி மீனாட்சி ஜனனம், ஆண்டாள் கல்யாணம், சீதா கல்யாணம், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரம், மகாலட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்பாள் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வள்ளி ஆச்சி மற்றும் குடும்பத்தினர் செய்தனர். சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சாரதா சேவாஸ்ரமம் சார்பில் காரைக்குடி சாரதா நிகேதன் கல்லுாரியில் நவராத்தி கொலு விழா நடந்தது. தினமும் திருவிளக்கு பூஜை, பஜனை, வழிபாட்டு நிகழ்ச்சிகளை மாணவிகள் நடத்தினர். ஏற்பாடுகளை செயலர் ஆத்மானந்த மகராஜ் செய்தார்.

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாஅம்மன் அம்பு எய்தலுடன்நிறைவடைந்தது. இக்கோயிலில் நவராத்திரி விழா அக்.2ல் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் துவங்கியது. தினசரி மாலை லட்சார்ச்சனை, அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு திசைகளிலும் அம்பு எய்தினார். ஏற்பாட்டினை பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !