முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி திந்திரிணீஸ்வரர் கோவிலில் பால் அபிஷேகம்
திண்டிவனம் : முதல்வர் ஜெ.,பூரண நலம் வேண்டி, திண்டிவனத்திலுள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், ௧௦௦௮ லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெ., பூரண நலம் வேண்டி, திண்டிவனத்திலுள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், பிரதோஷ நந்தி வழிபாடு மற்றும் ௧௦௦௮ லிட்டர் பால் அபிஷேகம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. திண்டிவனம் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், ஜெ., நலம் பெற வேண்டி நந்தி மற்றும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், நகர செயலாளர் தீனதயாளன், மூத்த வழக்கறிஞர் சங்கரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி, தலைமைக் கழக பேச்சாளர் தம்பிஏழுமலை, திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், முன்னாள் தலைவர் செல்வம், எம்.ஜி.ஆர்.மன்றம் ஜின்ராஜ், கவுன்சிலர்கள் சுதாகர், பொன்மலர் நடராஜன், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதர், பாலச்சந்தர், முன்னாள் ஜெ.,பேரவை செயலாளர் பாலசுந்தரம், நிர்வாகிகள் அய்யப்பன், செந்தில், விஸ்வநாதன், குமரன், கார்த்திக், அண்ணா தொழிற்சங்கம் குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், மகளிர் அணி குப்பு, சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பால் அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், பொதுமக்களுக்கு நகர்மன்ற தலைவர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.