முதலமைச்சர் நலம் பெற திருச்செந்தூரில் அமைச்சர்கள் பங்கேற்ற திரி சதி யாகம்
துாத்துக்குடி, முதல்வர் உடல் நலம் பெற வேண்டி திருச்செந்துார் முருகன் கோயிலில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற திரிசதி யாகம் நடந்தது. நேற்று காலை திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி,செய்தி,விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.பி.,க்கள் நெல்லை பிரபாகரன், தென்காசி வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டப்பிடாரம் சுந்தரராஜ், விளாத்திகுளம் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின் சஷ்டி மண்டபத்தில் முதல்வர் உடல் நலம் பெற 108 மூலிகைகளால் ஆன, ஏழு வகையான ேஹாமங்கள் நடந்தது. திரி சதி யாகமும் நடந்தது. காலை 11 மணி வரை நான்கு மணி நேரங்கள் நடந்தது.