கள்ளக்குறிச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3322 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.