உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் உடல்நலம்: பால்குட ஊர்வலம்

முதல்வர் உடல்நலம்: பால்குட ஊர்வலம்

மல்லசமுத்திரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி, மல்லசமுத்திரத்தில் பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. மல்லசமுத்திரம் பேரூராட்சியில், முதல்வர் உடல் நலம் பெற வேண்டி, நேற்று காலை, 8:00 மணியளவில், சின்ன மாரியம்மன் கோவிலில் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏராளமான பெண்கள், தலையில் பால்குடம் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். பின், சின்னமாரியம்மன் கோவில், பெரியமாரியம்மன் கோவில் ஆகியவற்றில் உள்ள சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பேரூராட்சி செயலாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !