பண்ணாரி கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :3319 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்தது. சத்தியமங்கலத்தை அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி, நேற்று சிறப்பு யாகம் நடந்தது. சென்னிமலை காவேரி சிவசுப்ரமணிய குருக்கள் தலைமை வகித்தார். இதில் விநாயகர் வழிபாடு, வருணஜபம், 1,008 முறை பாராயணம், ருத்ரஜபம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.