ஆனூர் அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :3319 days ago
கரூர்: பவித்திரம் மருதகாளியம்மன், மலையம்மன், ஆனூர் அம்மன் கோவிலில் மண்டலாபி?ஷக நிறைவு விழா நடந்தது. முன்னதாக, 108 சங்காபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பவித்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மண்டலாபிஷேகத்தில், கடந்த, 48 நாட்களாக பல்வேறு பூஜைகள், கட்டளை தாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்தனர்.