உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நலம் பெற அ.தி.மு.க.,வினர் நேர்த்திக்கடன்

முதல்வர் நலம் பெற அ.தி.மு.க.,வினர் நேர்த்திக்கடன்

தேனி, முதல்வர் ஜெ., உடல் நலம் பெற வேண்டி அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., பால்குடம் எடுத்து வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்தனர். முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி தேனி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக, கடந்த வாரம் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.,வினர் கையில் கங்கானம் கட்டி, காவி வேட்டி அணிந்து விரதம் இருந்தனர்.பால்குடம், அக்னி சட்டி நேற்று காலை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வீரபாண்டி கருப்பசுவாமி கோயிலில் இருந்து தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., பால்குடம் சுமந்து கவுமாரியம்மன் கோயிலுக்கு நடந்து வந்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் கதிர்காமு, ஜக்கையன், பார்த்தீபன் எம்.பி., ஒன்றிய செயலாளர் கணேசன் (தேனி), அன்னப்பிரகாஷ்( பெரியகுளம்), தேனி நகர செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் காசிமாயன், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆண்டி, காட்டுராஜா, சின்னச்சாமி, வைகை பாண்டி, வழக்கறிஞர்கள் மணி,செல்வம், ராஜசேகரன், முன்னாள் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி பால்பாண்டி, எம்.ஜி, ஆர். மன்ற இணைச்செயலாளர் நாராயணசாமி, எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்ட துணை செயலாளர் பாண்டியன், மாவட்ட இணை செயலாளர்கள் செல்லத்துரை, சுரேஷ், மாவட்ட முன்னாள் இணை செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பீமராஜ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மேலவை பிரதிநிதி ரத்தினம், ஊராட்சி செயலாளர் சுப்புராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜன், தர்மராஜ், கிளை செயலாளர்கள் தங்கராஜ், வேல் முருகன், ராஜன். பொன்மணி, பாஸ்கரன், மணி, ராமு, ரமேஷ், ரவி, ஜெயராம், லட்சுமணன், ஜெ.,பேரவை நிர்வாகிகள் முருகன், பாஸ்கரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்.,மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பிரதிநிதி சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முத்தையா, கிளை நிர்வாகிகள் தங்கப்பாண்டி, ஜெயக்குமார், சிவா,காந்தி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் பால்குடம், காவடி, அக்னி சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !