ஜெயின் கோவிலில் ஆன்மிக வழிபாடு
ADDED :3318 days ago
ஊட்டி : ஊட்டி மெயின் பஜாரில் உள்ள, ஸ்ரீ வாசு பூஜ்ஜிய ஜெயின் கோவிலில், மகாவீரர் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சாத்வீஜி சயம் பூர்ண சுரிஸ்ஜி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 400க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். பின்பு, ஆன்மிக சொற்பொழிவு, வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிர்வாகிகள் கூறுகையில்,ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை, சிறப்பு அன்னதான நிகழ்ச்சி, ஆன்மிக வழிபாடுகள் நடக்கிறது என்றனர்.