இந்த மரமிருந்தா வீட்டுக்கே பெருமை!
ADDED :3319 days ago
திருமாலின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ‘ஹரிபலம்’ என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதமிருப்பவர்கள் துவாதசி பாரணையில் (உணவில்) நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம் என்பர். நெல்லி இலையால் விஷ்ணுவை பூஜித்தாலும், நெல்லிக்கனியைப் பிரசாதமாகப் படைத்தாலும் வீட்டில் செல்வவளம் பெருகும். வீட்டில் ஒரு நெல்லி மரம் இருந்தால் அது வீட்டுக்கே பெருமை தரும்.