உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனூர் வேதநாராயண பெருமாள் கோவில் புனரமைக்கப்படுமா?

ஆனூர் வேதநாராயண பெருமாள் கோவில் புனரமைக்கப்படுமா?

ஆனுார் : ஆனுார் வேதநாராயண பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, பொதுக்கள் எதிர்பார்க்கின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் பகுதியில் உள்ள, வேதநாராயண பெருமாள் கோவில், மிகவும் பழமை வாய்ந்தது; இக்கோவில் சிதிலமடைந்து உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சுவர் மற்றும் கோபுர வாசலில் செடி, கொடிகள் முளைத்து, விரிசல் ஏற்பட்டு பாழடைந்துள்ளது. செடிகளை அகற்றாமல், தொடர்ந்து இதே நிலையில் இருந்தால் கோவில் முழுமையாக சீரழிந்து விடும். எனவே, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோவிலை பார்வையிட்டு புனரமைக்க முன்வர வேண்டும் என, பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !